தன்னை விட 11குறைந்த நபருடன் ஜோடி சேரும் பிரியா பவானி ஷங்கர்.

பிரியா பவானி ஷங்கர்
தமிழ் சினிமாவிற்கு சின்னத்திரையில் இருந்து என்ட்ரி கொடுத்த நட்சத்திரங்களில் ஒருவர் பிரியா பவானி ஷங்கர்.

இவர் மேயாத மான் படத்தில் கதாநாயகியாக நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானார். தொடர்ந்து பல படங்களில் நடித்து ரசிகர்களின் மனதையும் கொள்ளைகொண்டார்.

மேலும் இந்த ஆண்டு வெளிவந்த பத்து தல, ருத்ரன் மற்றும் பொம்மை என மூன்று திரைப்படங்கள் வெளிவந்தது. அடுத்ததாக இந்தியன் 2, விஷால் 34 ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

புதிய படம்
இந்நிலையில், தமிழ் மட்டுமின்றி தெலுங்கில் உருவாகும் பீமா எனும் திரைப்படத்திலும் கதாநாயகியாக கமிட் ஆகியுள்ளார் பிரியா பவானி ஷங்கர்.

இயக்குனர் ஹர்ஷா என்பவர் இயக்க 44 வயதாகும் தெலுங்கு நடிகர் கோபிசந்த் ஹீரோவாக நடிக்கும் பீமா என்ற படத்தில் 33 வயதாகும் பிரியா பவானி ஷங்கர் கதாநாயகியாக நடிக்கிறார் என அறிவித்துள்ளனர். இப்படத்தின் First லுக் போஸ்டர் கூட தற்போது வெளியாகியுள்ளது.