கணவர் தொல்லையால் உயிரை மாய்த்துக் கொண்ட பெண் கதறும் குழந்தை

பிரிந்து வாழும் கணவர் மற்றும் கடன் தொல்லையால் மன விரக்தியடைந்த, ஒரு குழந்தையின் தாயொருவர் தற்கொலை செய்துகொண்டு உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம் மன்னார், வங்காலை நறுவலிக்குளம் மாதிரி கிராமத்தில் நேற்று வியாழக்கிழமை (17) இரவு இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் றெஜினோல்ட் வாசுகி (22) என்பவரே உயிரிழந்துள்ளார்.

அவருக்கு இரண்டரை வயதில் ஒரு பெண்குழந்தை உள்ளது. கடந்த ந்து வருடங்களுக்கு முன் திருமணம் செய்துகொண்ட பெண், இரண்டு வருடங்களாக கணவரை பிரிந்து வாழ்ந்துவந்த நிலையிலேயே தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

பிரிந்து சென்ற கணவரால் விரக்தி
மன்னாரில் உள்ள ஒரு கடையில் வேலை செய்துவந்த நிலையில், கடன் தொல்லை மற்றும் பிரிந்து வாழும் கணவரின் துன்புறுத்தல்கள் தொடர்ந்து வந்ததால், மன விரக்தியும் வேதனையும் அடைந்துள்ளார்.

நேற்று இந்த பெண் தனது பணியிடத்திலிருந்து அரை நேரத்துடன் வீடு திரும்பியதன் பின்னர், இரவு 8 மணி வரை அவர் வெளியே வரவில்லை என கூறப்படுகிறது.

இந்நிலையில்,அவர் வீட்டுக்குள் தனது அறையை உள்பக்கமாக தாழிட்டுக்கொண்டு தூக்கில் தொங்கியுள்ளதாக கூறப்படுகிறது.

சடலத்தை மன்னார் பொது வைத்தியசாலைக்கு எடுத்துச் சென்று, உடற்கூற்று பரிசோதனைக்கு உட்படுத்தும்படியும், அதன் பின்னர் அதனை உறவினர்களிடம் ஒப்படைக்கும்படியும் மன்னார் மரண விசாரனை அதிகாரி பொலிஸாருக்கு பணிப்புரை வழங்கினார்.