யாழ். பல்கலைக் கழகத்தின் துணைவேந்தராக பேராசிரியர் சி. சிறிசற்குணராஜா மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் இந்நியமனம் வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
அதன்படி எதிர்வரும் ஓகஸ்ட் 28 ஆம் திகதி முதல் அடுத்து வரும் மூன்று ஆண்டுகளுக்குச் செயற்படும் வகையில் நியமனம் வழங்கப்பட்டுள்ளது.
அதேவேளை பல்கலைக் கழகத்தின் துணைவேந்தராக பேராசிரியர் சி. சிறிசற்குணராஜா கடையாற்றி வருகின்ற நிலையில் மீண்டும் அவரெ துணை வேந்தராக நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.