லோகேஷ் கனகராஜ் எடுத்த அதிரடி முடிவு!

லோகேஷ் கனகராஜ் தற்போது லியோ படத்தை இயக்கி வருகிறார். விஜய் நடிக்கும் இந்த படம் இறுதி கட்டத்தில் இருக்கிறது.

அடுத்து லோகேஷ் ரஜினி நடிக்கும் தலைவர்171 படத்தினை இயக்க இருக்கிறார். அதை முடித்ததும் கைதி படத்தை அவர் இயக்க போகிறார் என முன்பே கூறப்பட்டது.

ரோலக்ஸ்
இந்நிலையில் தற்போது வெளியாகி இருக்கும் லேட்டஸ்ட் தகவல் என்னவென்றால் கைதி 2 படத்தை தள்ளி வைத்துவிட்டு லோகேஷ் சூர்யா நடிக்கும் ரோலக்ஸ் படத்தை இயக்க போகிறார் என்பது தான்.

ஏற்கனவே சூர்யா ஒரு நிகழ்ச்சியில் தான் ரோலக்ஸ் மற்றும் இரும்பு கை மாயாவி ஆகிய கதைகளில் நடிப்பதாக அறிவித்தது உங்களுக்கு நினைவிருக்கலாம்.

எஸ்ஆர் பிரபு தான் ரோலக்ஸ் படத்தை தயாரிக்க போகிறார், அதற்கான பேச்சுவார்த்தை நடந்து வருவதாக தற்போது தகவல் வெளியாகி இருக்கிறது.