தளபதி 68 ஹீரோயின் இவர்தான்..

விஜய் அடுத்து வெங்கட் பிரபு இயக்கத்தில் தளபதி 68 படத்தில் நடிக்க இருக்கிறார். அந்த படத்தை அறிவித்து சில மாதங்கள் ஆகிவிட்ட நிலையில் ஷூட்டிங் எப்போது தொடங்கும் என ரசிகர்களும் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்.

முதற்கட்ட பணிகள் தற்போது நடைபெற்று வரும் நிலையில் ஹீரோயின் யார் என்பது பற்றி பல தகவல்கள் உலா வந்து கொண்டிருந்தன. ஆனால் வெங்கட் பிரபு ஒரு விழாவில் பேசும்போது நயன்தாரா, சமந்தா மற்றும் கீர்த்தி சுரேஷ் ஆகியோர் இந்த படத்தில் ஒப்பந்தம் ஆகவில்லை என வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

இளம் நடிகை
இந்நிலையில் தற்போது ஒரு புது தகவல் வெளியாகி இருக்கிறது. டாக்டர், டான் உள்ளிட்ட படங்களில் நடித்து புகழ்பெற்ற பிரியங்கா அருள்மோகன் தான் தளபதி 68 ஹீரோயினாக நடிக்க போகிறார் என தகவல் வெளியாகி இருக்கிறது.

மேலும் ஜோதிகாவும் ஒரு முக்கிய ரோலில் நடிக்கிறார் என கூறப்படுகிறது. இருப்பினும் இது அதிகாரபூர்வ அறிவிப்பு வந்தால் தான் உறுதியாகும்.