அனுவுக்கு தெரிய வந்த உண்மை.. சுந்தரி அடுத்த வார ப்ரொமோ

சுந்தரி
சன் டிவியின் சுந்தரி சீரியல் இறுதிக்கட்டத்தில் இருப்பதாக சமீபத்தில் செய்தி வெளியாகி இருந்தது. சீரியலின் கதைக்களம் இறுதிக்கட்டத்தை நோக்கி நகர தொடங்கியதும் எல்லோருக்கும் தெரிந்தது தான்.

சுந்தரி ஐஏஎஸ் தேர்வில் வெற்றி பெற்றுவிட்டார், அனுவுக்கு குழந்தை பிறந்துவிட்டது. அடுத்து கார்த்திக்கின் உண்மை முகம் தெரியவந்துவிட்டால் சீரியல் முடிந்துவிடும் என எதிர்பார்க்கப்பட்டு வருகிறது.

அடுத்த வார ப்ரொமோ
இந்நிலையில் அடுத்த வார ப்ரோமோ தற்போது வெளியாகி இருக்கிறது. அதில் கார்த்திக் பற்றி உண்மை தெரிந்து அனு வந்து அவரை திட்டி அசிங்க படுத்தி இருக்கிறார்.

இது நிஜமா இல்லை கனவா என பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.