நடிகை சந்தியா
சன் தொலைக்காட்சியில் நடிகை ரம்யா கிருஷ்ணன் நடிப்பில் பெரிய அளவில் ஹிட்டான வம்சம் சீரியலில் பூமிகா என்ற கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர் சந்தியா ஜகர்லமுடி.
இவர் சந்திரலேகா போன்ற சில சீரியல்களிலும் நடித்திருக்கிறார்.
இப்போது அவர் சீரியல்கள் பக்கம் வராமல் தெரு நாய்களை பாதுகாத்து வரும் பணியை செய்து வருகிறார்.
சோகமான பதிவு
அண்மையில் இவர் தனது வாழ்க்கையில் நடந்த சோகமான விஷயம் குறித்து பேசியுள்ளார். 2006ம் ஆண்டு கும்பகோணத்தில் செல்லமடி நீ எனக்கு டைட்டில் பாடல் கோயில் யானையுடன் எடுக்கப்பட்டது.
அப்போது யானை என்னை மோசமாக தாக்கியது, அதனால் எனக்கு 7 இடங்களில் எலும்பு முறிவு ஏற்பட்டது, சில பாகங்களையும் அகற்ற நேர்ந்தது.
யானை என்னை தும்பிக்கையால் என்னை நசுக்கியது, உயிர் பிழைத்ததே பெரிய விஷயம் தான்.எனவே என்னால் வலி தாங்க முடியாமல் நான் துடித்துக் கொண்டிருந்தபோது, அங்கிருந்த ஒரு சிலர் என்னை தூக்கிக்கொண்டு ஓடிக் கொண்டிருந்தார்கள்.
அப்போது என்னை தூக்கிக் கொண்டு போன டான்ஸர்களின் ஒருவன், நான் வலியில் துடித்துக் கொண்டிருக்கும் போது எனக்கு உதவி செய்வது போல நடித்து என்னுடைய மார்பில் கை வைத்து சுகம் கண்டு கொண்டிருந்தார்.
என் வாழ்க்கையில் கஷ்டமான விஷயம் என்றால் அதை தான் நான் சொல்வேன் என கண்ணீர் மல்க பேட்டி கொடுத்துள்ளார் நடிகை.