சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த நடிகர் விஷ்ணுவிஷால்

நடிகர் விஷ்ணு விஷால் ட்விட்டரில் அடிக்கடி பல விஷயங்களை வெளிப்படையாக பேச கூடியவர். அவர் சமீபத்தில் போட்டிருந்த ட்விட் வைரல் ஆனது.

நான் மஹான் அல்ல படத்தில் நான் நடித்திருக்க வேண்டும், இப்போதும் நினைக்கிறேன்.. அந்த படம் எனது இரண்டாவது படமாக அமைந்து இருந்தால் எப்படி இருந்திருக்கும் என்று என விஷ்ணு விஷால் பதிவிட்டு இருந்தார்.

இந்த ட்வீட் வைரல் ஆன நிலையில் கார்த்தி விஷ்ணு விஷாலின் வாய்ப்பை தட்டி பறித்துவிட்டார் என ஒரு சர்ச்சை எழுந்திருக்கிறது.

விஷ்ணு விஷால் விளக்கம்
இந்த சர்ச்சை பற்றி விஷ்ணு விஷால் விளக்கம் கொடுத்து இருக்கிறார். “நான் போட்ட ட்விட் unfiltered தகவல் தான். என் முதல் படம் மிகப்பெரிய ஹிட். ஒரு ஹீரோவுக்கு இரண்டாவது படம் தான் எதிர்காலத்தை தீர்மானிக்கும். நான் மகான் அல்ல எனது இரண்டாவது படமாக இருந்திருக்க வேண்டும்.

என்னுடைய இரண்டாம் மற்றும் மூன்றாம் படங்கள் மிகப்பெரிய பிளாப் . அதற்கு பிறகு சினிமா துறையில் காலூன்ற பல படங்கள் மற்றும் பல வருடங்கள் ஆகிவிட்டது.

அதனால் தான் நான் மகான் அல்ல படத்தில் நடித்து இருந்தால் எப்படி இருந்திருக்கும் என யோசிப்பேன். என் செயல்களால் அந்த படம் கையை விட்டு போகவில்லை. Dynamics of cinema தான் அதற்கு முக்கிய காரணம். அவ்வளவு தான்.

இவ்வாறு விஷ்ணு விஷால் கூறி இருக்கிறார். இதன் மூலம் சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்து இருக்கிறார் அவர்.