திருமணத்தை மறைமுகமாக அறிவித்த விஜய் தேவரகொண்டா?

விஜய் தேவரகொண்டா
நடிகர் விஜய் தேவரகொண்டா தற்போது குஷி என்ற படத்தில் நடித்து முடித்திருக்கிறார். அவர் சமந்தா உடன் ரொமான்டிக் ஆக நடித்திருப்பதை பார்த்து அவர்கள் நிஜத்திலேயே காதலிக்கிறார்களா என்று கூட ஒரு வதந்தி பரவ தொடங்கிவிட்டது.

குஷி பட ப்ரோமோஷனுக்காக கொடுத்த பேட்டிகளில் அது வதந்தி என அறிவித்துவிட்டனர்.

திருமணம்?
இந்நிலையில் தற்போது இன்ஸ்டாக்ராமில் விஜய் தேவரகொண்டா ஒரு போட்டோவை வெளியிட்டு இருக்கிறார். ஒரு பெண்ணின் கையை அவர் பிடித்து இருக்கும் அந்த போட்டோவை வெளியிட்டு “Lots happening but this one’s truly special- announcing soon” என அவர் குறிப்பிட்டு இருக்கிறார்.

இதை பார்த்த நெட்டிசன்கள் அவருக்கு விரைவில் திருமணம் நடக்கிறதை தான் இப்படி மறைமுகமாக அறிவித்து இருக்கிறார் என கூறி வருகின்றனர். நடிகை ராஷ்மிகாவை அவர் காதலித்து வருவதாகவும் கூறப்படுவதும் குறிப்பிடத்தக்கது.

இருப்பினும் இது விஜய் தேவரகொண்டாவின் அடுத்த பட அறிவிப்பாக கூட இருக்கலாம் என இன்னொரு தரப்பினர் கூறி வருகின்றனர். பொறுத்திருந்த்து பார்க்கலாம்.