ஜெயிலர் – நெல்சன்
பாக்ஸ் ஆபிஸை அடித்து நொறுக்கி தற்போது ரூ. 600 கோடியை நெருங்கி கொண்டு இருக்கிறது ஜெயிலர். நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவான இப்படத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் ஹீரோவாக நடித்திருந்தார்.
மேலும் மோகன்லால், சுனில், சிவராஜ்குமார், தமன்னா, ரம்யா கிருஷ்ணன் என பல நட்சத்திரங்களும் இப்படத்தில் நடித்திருந்தனர். மாபெரும் வெற்றியடைந்துள்ள ஜெயிலர் படத்திற்கு பின் நெல்சன் அடுத்ததாக இயக்கப்போகும் படத்தின் மீது அனைவருடைய கவனமும் திரும்பியுள்ளது.
எகிறிய சம்பளம்
இந்நிலையில், மீண்டும் சன் பிச்சர்ஸ் நிறுவனத்திற்கு தான் படம் பண்ண போகிறாராம் நெல்சன். அப்படத்தை இயக்க இயக்குனர் நெல்சன் திலீப்குமாருக்கு ரூ. 55 கோடி சம்பளம் கொடுக்க முடிவு செய்துள்ளதாம் சன் பிச்சர்ஸ் நிறுவனம்.
ஒரே படத்தின் வெற்றியின் மூலம் நெல்சன் திலீப்குமார் சம்பளம் இரட்டிப்பு ஆகியுள்ளது. ஜெயிலர் படத்தை இயக்க ரூ. 22 கோடி சம்பளம் வாங்கிய நெல்சன், அதே தயாரிப்பு நிறுவனத்தில் அடுத்ததாக இயக்கவிருக்கும் படத்திற்காக ரூ. 55 கோடி சம்பளமாக வாங்கவுள்ளார். தமிழ் சினிமாவில் பல முன்னணி நடிகர்களை விட நெல்சன் சம்பளம் அதிகம் என பேசப்படுகிறது.