ஜவான் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் விஜய்!..ரசிகர்களுக்கு காத்திருக்கும் மாஸ் விருந்து

ஜவான்
அட்லீ இயக்கத்தில் பாலிவுட் நடிகர் ஷாருக்கான் நடிப்பில் உருவாகியுள்ள ஜவான் திரைப்படம் வருகிற செப்.7-ம் தேதி வெளியாக இருக்கிறது.

தற்போது இப்படத்தின் இசை வெளியீட்டுவிழா பிரமாண்டமாக சென்னையில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் இன்று நடைபெற்று வருகிறது.

இதில் பிரபல இந்த விழாவில் அட்லீ, நயன்தாரா, விஜய் சேதுபதி உள்ளிட்ட பலப் பிரபலங்கள் கலந்துகொண்டுள்ளனர்.

எகிறும் எதிர்பார்ப்பு
இந்நிலையில் விஜய் ஜவான் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்துகொள்ள இருப்பதாக தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. ஆனால் இந்த செய்தி எந்த அளவிற்கு உண்மை என்று தெரியவில்லை.