48 வயதில் திருமணம் குறித்து பேசியுள்ள நடிகை நக்மா

நடிகை நக்மா
பாலிவுட் சினிமாவில் 1990ம் ஆண்டு சல்மான் கான் படத்தில் நடித்ததன் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானவர் நடிகை நக்மா.

அதன்பின் ஹிந்தி, தெலுங்கு என பல படங்களில் நடித்து வந்த இவரை இயக்குனர் ஷங்கர் தான் காதலன் படம் மூலம் தமிழுக்கு அழைத்து வந்தார்.

அப்பட வெற்றியை தொடர்ந்து நக்மா பாட்ஷா, வில்லாதி வில்லன், லவ் பேர்ட்ஸ், மேட்டுக்குடி, ஜானகிராமன், பிஸ்தா, சிட்டிசன் உள்ளிட்ட படங்களில் நடித்து உயர்ந்தார்.

குறிப்பாக நக்மாவிற்கு பெரிய பெயர் கொடுத்தது ரஜினியுடன் நடித்த பாட்ஷா திரைப்படம் தான். இவர் கடைசியாக 2008ம் ஆண்டு போஜ்புரி மொழியில் நடித்ததோடு நடிப்புக்கு முழுக்கு போட்டுவிட்டு அரசியலில் பயணித்து வருகிறார்.
திருமண ஆசை
எனக்கு 48 வயது ஆகிறது, திருமணம் செய்யவே கூடாது என்ற எண்ணமெல்லாம் எனக்கு இல்லை.சொல்லப்போனால் திருமணம் செய்து குடும்பம், குழந்தைகள் என வாழ்வதற்கு ஆசை இருக்கிறது.

அப்படி ஏதும் நடக்கிறதா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம் என பேசியுள்ளார்.