பிக்பாஸ் 7
விஜய் தொலைக்காட்சியில் எல்லோரும் எதிர்ப்பார்த்துக் கொண்டிருக்கும் பிக்பாஸ் 7 நிகழ்ச்சி விரைவில் ஒளிபரப்பாக இருக்கிறது.
செப்டம்பர் கடைசி வாரம் அல்லது அக்டோபர் 2வது வாரத்தில் நிகழ்ச்சி தொடங்கலாம் என கூறப்படுகிறது.
நிகழ்ச்சியில் விஜய் டிவியின் தொகுப்பாளர்கள், சீரியல் நடிகர்கள், அப்பாஸ், சோனியா அகர்வால் என நாம் எதிர்ப்பார்க்காத பிரபலங்கள் கலந்துகொள்ள இருக்கிறார்கள் என்ற தகவல் வலம் வந்த வண்ணம் உள்ளன.
ஆனால் எது உண்மையான லிஸ்ட் என்பது தெரியவில்லை.
முடிவுக்கு வரும் தொடர்கள்
தற்போது என்னவென்றால் பிக்பாஸ் நிகழ்ச்சிக்காக விஜய் தொலைக்காட்சியில் 3 தொடர்கள் முடிவுக்கு வரப்போவதாக மீண்டும் ஒரு தகவல் வலம் வருகிறது.
எந்தெந்த் சீரியல்கள் என்றால் பாண்டியன் ஸ்டோர்ஸ், கண்ணான கண்ணே மற்றும் காற்றுக்கென்ன வேலி தொடர்கள் தான் முடிவுக்கு வருகிறதாம்.
கண்ணான கண்ணே மற்றும் காற்றுக்கென்ன வேலி முடியலாம் என உறுதியாக ரசிகர்கள் கூறினாலும் பாண்டியன் ஸ்டோர்ஸ் முடியுமா என்பது சந்தேகம் என்கின்றனர்.