ஜவான்
தற்போது ஒட்டுமொத்த சினிமா துறையும் ஜவான் படத்தின் ரிலீசுக்காக தான் காத்திருக்கிறது. ஷாருக்கான் நடிப்பில் அட்லீ இயக்கத்தில் உருவாகி இருக்கும் இந்த படம் 1000 கோடி வசூலிக்குமா என்பது தான் பாலிவுட்டில் இருக்கும் எதிர்பார்ப்பு. ஷாருக்கின் முந்தைய படமான பதான் 1000 கோடி வசூலித்த நிலையில் இந்த படத்தின் மீதும் எதிர்பார்ப்பு உச்சத்தை தொட்டுஇருக்கிறது.
நயன்தாரா, விஜய் சேதுபதி உள்ளிட்ட பலர் படத்தில் நடித்து இருக்கிறார்கள் என்பதால் தமிழ்நாட்டிலுள்ள படத்திற்கு நல்ல வசூல் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
முதல் நாள் வசூல் கணிப்பு
இந்நிலையில் பாக்ஸ்ஆபிஸ் வல்லுனர்களின் கணிப்பின்படி ஜவான் படம் முதல் நாளில் இந்தியாவில் குறைந்தபட்சமாக கணக்கிட்டாலே 75 கோடி நெட் வசூல் வரலாம் என்றும், சாதாரணமாக 100 கோடிக்கும் மேல் நெட் வசூல் வர வாய்ப்பிருப்பதாக கணித்து இருக்கின்றனர்.
முன்பதிவிலயே பல லட்சம் டிக்கெட்டுகள் விற்று தீர்ந்து இருப்பதால் ஜவான் படம் முதல் வாரத்தில் நல்ல வசூல் குவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.