பிரபாஸ் கன்னத்தில் அறைந்த ரசிகை!

நடிகர் பிரபாஸ் பாகுபலி படத்திற்கு பிறகு இந்தியா முழுவதும் அறியப்படும் ஹீரோவாகிவிட்டார். அதற்கு பிறகு அவர் பல pan இந்தியா படங்களில் நடித்தாலும் பெரிய ஹிட் கொடுக்க முடியவில்லை. இருப்பினும் தொடர்ந்து அவர் பெரிய படஜெட் படங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார்.

அடுத்து கேஜிஎப் இயக்குனர் உடன் பிரபாஸ் கூட்டணி சேர்ந்திருக்கும் சலார் படத்தின் மீது பெரிய எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. அந்த படம் வரும் டிசம்பர் 22ம் தேதி ரிலீஸ் ஆகிறது.

கன்னத்தில் அடித்த ரசிகை
பிரபாஸ் ரசிகை ஒருவர் பொது இடத்தில் அவருடன் செல்பி எடுக்க வேண்டும் என கேட்டிருக்கிறார். அவரும் பொறுமையாக அந்த பெண்ணுடன் செல்பிக்கு போஸ் கொடுக்கிறார்.

உணர்ச்சியில் பொங்கிய அந்த பெண் போகும்போது பிரபாஸ் கன்னத்தில் அடித்துவிட்டு சென்றிருக்கிறார். அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி இருக்கிறது.