ஆதி குணசேகரனாக மாஸ் என்ட்ரி கொடுத்த வேல ராமமூர்த்தி

ஆதி குணசேகரன்
எதிர்நீச்சல் சீரியலில் மாரிமுத்து மரணத்திற்கு பின் ஆதி குணசேகரன் கதாபாத்திரத்தில் யார் நடிக்க போகிறார் என கேள்வி எழுந்தந்து.

பிரபல நடிகரும், எழுத்தாளருமான வேல ராமமூர்த்தி தான் அடுத்த ஆதி குணசேகரன் என ஏற்கனவே கூறப்பட்டு வந்த நிலையில், மற்ற சில நடிகர்களின் பெயர்களும் இதில் அடிபட்டது.

இந்நிலையில், தற்போது வெளிவந்துள்ள ப்ரோமோவில் புதிய ஆதி குணசேகரனாக நடிக்கவிருப்பதாக வேல ராமமூர்த்தி என உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆம், எதிர்நீச்சல் சீரியலில் மாரிமுத்து மறைவால், ஆதி குணசேகரன் வீட்டை விட்டு வெளியேறிவிட்டார் என கதையை மாற்றி அமைந்தனர்.

மாஸ் என்ட்ரி
தற்போது ஆதி குணசேகரன் கதாபாத்திரத்தில் வேல ராமமூர்த்தி நடிக்க வந்துவிட்டதால், வீட்டை விட்டு வெளியேறிய ஆதி குணசேகரன் மீண்டும் வீட்டிற்குள் மாஸ் என்ட்ரி கொடுக்கிறார். அதன் ப்ரோமோ வீடியோ தற்போது சன் டிவி வெளியிட்டுள்ளது.

இதில் வேல ராமமூர்த்தியின் முகத்தை காட்டவில்லை என்றாலும், அது அவர் தான் என உறுதியாக கூற முடிகிறது. மாரி முத்துவை போல் வேல ராமமூர்த்தியும் ஆதி குணசேகரன் கதாபாத்திரத்தில் கலக்குவாரா என பொறுத்திருந்து பார்ப்போம்.

இதோ அந்த ப்ரோமோ வீடியோ