பிக் பாஸ்
கடந்த வாரம் பிரமாண்டமாக தொடங்கிய பிக் பாஸ், புதிய விதிமுறைகளுடன் விறுவிறுப்பாக போட்டி நடைபெற்று வருகிறது.
இந்த வாரம் பிரதீப், யுகேந்திரன், ஜோவிகா, அனன்யா ராவ், ரவீனா தாஹா, ஐஷு, பாவா செல்லதுரை, யுகேந்திரன் ஆகியோர் நாமினேஷன் லிஸ்ட்டில் உள்ளனர்.
பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற போகும் முதல் போட்டியாளர் யார்? என்ற கேள்வி ரசிகர்களிடம் உள்ளது.
குழப்பத்தில் ரசிகர்கள்
இந்த வாரம் குறைந்த வாக்குகள் பெற்றதால் அனன்யா ராவ் வெளியேறுவர் என்று கூறப்பட்ட நிலையில், நடிகர் யுகேந்திரன் தான் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறி உள்ளதாக சில தகவல் வெளியாகி இருக்கிறது. இதனால் ரசிகர்கள் குழப்பம் அடைந்துள்ளனர்.