பிரமாண்டமாக உருவாகும் லியோ ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி.

லியோ
லோகேஷ் கனகராஜ் – விஜய் கூட்டணியில் உருவாகியுள்ள லியோ படம் ரிலீஸ் தேதி நெருங்கி கொண்டு இருக்கிறது. இப்படத்தின் அடுத்தடுத்த ப்ரமோஷன்களை படக்குழுவினர் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர்.

சமீபத்தில் வெளியான லியோ படத்தின் ட்ரைலரை 24 மணி நேரத்தில் 47 மில்லியன் பார்வையாளர்கள் பார்த்து உள்ளனர்.

ரசிகர்களிடம் பேசும் விஜய்!
இந்நிலையில் லியோ படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சியை அக்டோபர் 12ம் தேதி துபாயில் நடத்த படக்குழு திட்டமிடப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

இதில் அனிருத் மற்றும் படத்தின் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கலந்துகொள்வார் பங்கேற்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த நிகழ்ச்சியில் நடிகர் விஜய் நேரடியாக பகேற்கவில்லை என்றாலும் வீடியோ வாயிலாக படம் குறித்து பேசுவார் என்று சினிமா பத்திரிகையாளர் கூறியுள்ளார். ‘