திரையுலகில் அதிக வசூல் செய்த அட்லீயின் ஜவான் படம்!

ஜவான்
அட்லீ இயக்கத்தில் பாலிவுட் நடிகர் ஷாருக்கான் நடிப்பில் உருவான ஜவான் திரைப்படம் கடந்த செப்டம்பர் 7-ஆம் தேதி வெளியானது.

இப்படத்தில் ஹீரோயினாக கோலிவுட் சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்திருந்தார். மிரட்டல் வில்லன் கதாபாத்திரத்தில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடித்துள்ளார்.

அட்லீ பல படங்களை காப்பி அடித்து தான் ஜவான் படத்தை உருவாக்கினார் என்று விமர்சனம் செய்தாலும் வசூல் ரீதியாக மாபெரும் வெற்றியை பெற்றுள்ளது.

பாக்ஸ் ஆபிஸ் சாதனை
இந்நிலையில் ஜவான் பட வெளியாகி ஒரே மாதத்திற்குள் ஒட்டு மொத்த ஹிந்தி படத்தின், சாதனைகளையும் முறியடித்துள்ளது.

அதாவது ஹிந்தியில் எந்த படமும் 1100 கோடியை எட்டிடாத நிலையில், ஜவான் திரைப்படம் ரூ 1103 கோடி வசூலித்ததாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.