குஷி
விஜய் தேவரகொண்டா மற்றும் சமந்தா இணைந்து நடித்து வெளிவந்த திரைப்படம் குஷி. கடந்த மாதம் திரைக்கு வந்த இப்படத்தை தெலுங்கு இயக்குனர் சிவா நிர்வாணா என்பவர் இயக்கியிருந்தார்
பெரும் எதிர்பார்ப்பில் வெளிவந்த இப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. குறிப்பாக தமிழகத்தில் குஷி படம் சூப்பர்ஹிட்டாகியுள்ளது. ஆனால், தெலுங்கில் இப்படம் தோல்வியடைந்துள்ளது என தெரியவந்துள்ளது.
வசூல் விவரம்
இந்நிலையில், உலகளவில் குஷி திரைப்படம் செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி பார்த்தல், சமந்தாவின் குஷி படம் உலகளவில் ரூ. 79 கோடி வரை வசூல் செய்துள்ளது.
இதில் குஷி திரைப்படம் எந்தெந்த இடங்களில் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பதையும் பார்க்கலாம் வாங்க.
தெலுங்கில் – ரூ. 42 கோடி
தமிழ்நாட்டில் – ரூ. 10 கோடி
இந்தியாவில் மற்ற இடங்களில் – ரூ. 7.40 கோடி
வெளிநாடு – ரூ. 19 கோடி