லோகேஷ் கனகராஜ் படத்திலிருந்து விலகிய நடிகை நயன்தாரா..

லோகேஷ் – நயன்தாரா
நடிகை நயன்தாரா முதல் முறையாக லோகேஷ் கனகராஜ் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் என சில மாதங்களுக்கு முன் திரை வட்டாரத்தில் இருந்து தகவல் வெளிவந்தது.

ஆனால், லோகேஷ் கனகராஜ் இயக்கும் படத்தில் இல்லை, தயாரிக்கும் படத்தில் என்றனர். இப்படத்திற்கு லோகேஷ் கதை எழுதியுள்ளார், அவருடைய நெருங்கிய நண்பரும் இயக்குனருமான ரத்னகுமார் தான் இப்படத்தை இயக்குகிறார்.

ஹாரர் திரில்லர் கதைக்களத்தில் உருவாகும் இப்படத்தில் ராகவா லாரன்ஸ் மற்றும் நயன்தாரா இணைந்து நடிப்பதாக கூறப்பட்டது.

விலகிய நயன்தாரா
ஆனால், தற்போது வெளிவந்துள்ள தகவலின்படி, நயன்தாரா இப்படத்திலிருந்து வெளியேறிவிட்டாராம். காரணம் என்னவென்று இதுவரை தெரியவில்லை.

இதனால் அவருக்கு பதிலாக வேறு யாரை நடிக்க வைப்பது என்ற முயற்சியில் படக்குழு இறங்கியுள்ளதாகவும், கதையில் சில மாற்றங்களை கொண்டு வந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. எது எப்படியோ ராகவா லாரன்ஸ் தான் இப்படத்தின் ஹீரோ என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை.