ரத்தம்
சி.எஸ். அமுதன் நகைச்சுவையான படங்களை மட்டுமே தான் இதுவரை நமக்கு கொடுத்துள்ளார். ஆனால், முதல் முறையாக வித்தியாசமான கதைக்களத்தில் எடுத்துள்ள திரைப்படம் தான் ரத்தம்.
விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகியுள்ள இப்படம் கடந்த 6ஆம் தேதி திரையரங்கில் வெளிவந்தது.
விஜய் ஆண்டனியுடன் இணைந்து மஹிமா நம்பியார், நந்திதா, ரம்யா நம்பீசன் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். முதல் நாளில் இருந்து மக்கள் ஓரளவு நல்ல வரவேற்பை ரத்தம் திரைப்படம் பெற்று வருகிறது.
வசூல்
இந்நிலையில், இப்படம் வெளிவந்து இரண்டு நாட்களில் உலகளவில் ரூ. 1.7 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது. இனி வரும் நாட்களில் ரத்தம் திரைப்படம் எவ்வளவு வசூல் செய்யும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.