ஹொரணை, பல்லபிட்டிய பிரதேசத்தில் பயணித்த இரண்டு தனியார் பஸ்கள் ஒன்றுடன் ஒன்று மோதிய சம்பம் ஒன்று இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதில் 6 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக ஹொரண தலைமையக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இடம் பெற்ற விபத்து
விபத்து நடந்த அதே நேரத்தில் விபத்தை ஏற்படுத்திய பேருந்து சாரதியை அப்பிரதேச மக்கள் தாக்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து பொலிஸார் தலையிட்டு சாரதியை பெரும் பிரயத்தனப்பட்டு மீட்டு கைது செய்ய நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்விபத்தில் இரு பெண்கள் உட்பட 6 பேர் படுகாயமடைந்த நிலையில் அம்புயூலன்ஸ் மூலம் ஹொரணை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.