அலதெனியவில் மிருகங்களை வேட்டையாடுவதற்காக புதைக்கப்பட்டிருந்த பட்டாசை மிதித்த 15 வயதான சிறுவன் பலத்த காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அலதெனிய பொல் அத்துவிலுள்ள வீதிக்கு அருகில் இச் சம்பவம் இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
போத்தல் என்று நினைத்தே பட்டாசை அச்சிறுவன் மிதித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பட்டாசை புதைத்ததாகக் கூறப்படும் ஒருவரை அலதெனிய பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்
கைது செய்யப்பட்ட 27 வயதான சந்தேகநபர் விலங்குகளை வேட்டையாடுவதற்காக வீட்டில் மறைத்து வைத்திருந்த வெடிப்பொருட்கள், பட்டாசு மற்றும் இரும்பு குண்டுகள் ஆகியன கைப்பற்றப்பட்டுள்ளன என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சந்தேகநபரின் வீட்டை சோதனைக்கு உட்படுத்திய போது இராணுவத்தில் இருந்து தப்பியோடி தலைமறைவாகியிருந்த 25 வயதான இளைஞனும் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.