பிக் பாஸ்
சின்னத்திரையில் பிரமாண்டமாக நடந்துவரும் நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிக்ழ்ச்சியை முதல் சீசனில் இருந்து உலக நாயகன் கமல் ஹாசன் தான் தொகுத்து வழங்கி வருகிறார். கிட்டத்தட்ட 8 ஆண்டுகளாக நடந்துவரும் இந்த நிகழ்ச்சி பல வெற்றியாளர்களை பார்த்துள்ளது. முதல் சீனாவில் இருந்து சற்று விவரமாக பார்க்கலாம் வாங்க.
பிக் பாஸ் ஏழாவது (நடப்பு) சீசனில் இந்த வாரம் உங்களுடைய வாக்கு யாருக்கு?
விஷ்ணு
விசித்ரா
பூர்ணிமா
பிரதீப்
மாயா
ஜோவிகா
அக்ஷயா
முதல் சீசன்
இந்த விளையாட்டு எப்படி இருக்க போகிறது, மக்களிடம் போய் சேருமா, சேராதா என பல கேள்விகளுடன் முதல் சீசன் துவங்கியது. இதில் சினேகன், கணேஷ் வெங்கட்ராம், ஆர்த்தி, ஓவியா, ஆரவ், சத்தி, ஜுலி, சுஜா வருணி என திரையுலகை சேர்ந்த பலரும் போட்டியாளர்களாக கலந்துகொண்டனர். இதில், மக்கள் மனதை அதிகம் கவர்ந்து பிக் பாஸ் முதல் சீசன் டைட்டில் வின்னர் ஆனார் ‘ஆரவ்’.
இரண்டவது சீசன்
முதல் சீசன் போல் இருக்கும் என மக்கள் மத்தியில் பெறும் எதிர்பார்ப்பில் இருந்து சொதப்பிய சீசன் என்றால் அது சீசன் 2 தான். மஹத், யாஷிகா, ரித்விகா, ஐஷ்வர்யா தத்தா, பொனம்பலம், மும்தாஜ், தாடி பாலாஜி என பலரும் இதில் கலந்துகொண்டனர். இந்த சீசன் 2-வில் மக்களால் ரித்விகா டைட்டில் வின்னராக தெர்ந்தெடுக்கப்படார்.
மூன்றாவது சீசன்
முதல் சீசனுக்கு பின் டி ஆர் பி-யில் கலக்கிய சீசன் என்றால் அது இந்த சீசன் 3 தான். சாண்டி மாஸ்டர், முகென் ராவ், தர்ஷன், கவின், லாஸ்லியா, வனிதா, சேரன், மீரா மிதும், ஷெரின், சாக்ஷி அகர்வால் என ஒவ்வொரு போட்டியாளரிடம் இருந்து ஒவ்வொரு நாளும் பக்காவான கண்டெண்ட் கிடைத்துகொண்டே இருந்தது. இந்த சீசன் வெற்றியாளராக மக்களால் முகென் ராவ் தெர்ந்தெடுக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
நான்காவது சீசன்
ஆரி, பாலாஜி, ரியோ, ரம்யா பாண்டியன், நிஷா, கேப்ரியலா, ஆஜித், சனம் ஷெட்டி என பலரும் திரையுலக நட்சத்திரங்கள் பிக் பாஸ் 4வது சீசனில் கலந்துகொண்டனர். இதில் மக்கள் மத்தியில் அதிகம் கவனம் ஈர்த்த நடிகர் ஆரி அர்ஜுனன் பிக் பாஸ் 4 டைட்டில் வின்னர் ஆனார்.
ஐந்தவது சீசன்
ரசிகர்கள் மத்தியில் அதிகம் வரவேற்பை பெற்ற சீசன்களில் ஒன்று பிக் பாஸ் சீசன் 5. தொகுப்பாளினி பிரியங்கா, ராஜு, சஞ்சீவ், நிரூப், அக்ஷரா, இமான் அண்ணாச்சி, ஐக்கி பெரி, சிபி, தாமரை செல்வி என பலரும் இதில் கலந்துகொண்டனர். இந்த சீசன் 5ல் மக்களை அதிகம் என்டர்டைன்மென்ட் செய்த ராஜு பிக் பாஸ் 5 டைட்டில் வின்னர் ஆனார்.
ஆறாவது சீசன்
அசீம், எ டி கே, அமுதவாணன், ஜனனி, ரச்சிதா, ஷிவின், விக்ரமன், கதிரவன், தனலட்சுமி, ஆயிஷா, அசல் கோளாரு என பலரும் கலந்துகொண்ட இந்த பிக் பாஸ் 6ல் அதிரடி திருப்பமாக டைட்டில் வின்னர் ஆனார் அசீம். சீசன் துவக்கத்தில் மக்கள் மத்தியில் இருந்து வெறுப்பை மட்டுமே சம்பாதித்த அசீம், இறுதியில் மக்கள் மத்தியில் இருந்து அதிக வாக்குகளை பெற்று டைட்டில் வின்னர் ஆனது பலருக்கும் சர்ப்ரைஸாக இருந்தது.
ஏழாவது [நடப்பு] சீசன்
கூல் சுரேஷ்
காக்க காக்க படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமான கூல் சுரேஷ் சில திரைப்படங்களில் நகைச்சுவை நடிகராக பணிபுரிந்துள்ளார். ஆனால், திரையரங்கம் வெளியில் படங்கள் குறித்து விமர்சனம் செய்தது தான் ரசிகர்கள் மத்தியில் இவரை கொண்டு சேர்த்தது. இதன்பின் தற்போது பிக் பாஸ் விட்டிற்குள் எண்ட்ரி கொடுத்துள்ள கூல் சுரேஷ், மக்களை கவரும் வகையிலான விஷ்யங்களை செய்து வருகிறார்.
பவா செல்லதுரை
இவருடைய வாசிபிற்கும், கதைக்கும் பல்லாயிரம் ரசிகர்கள் இருக்கிறார்கள் என்று சொன்னால் அது மிகையாகாது. பிக் பாஸ் வீட்டிற்குள் கூட தன்னுடைய கதைகளை கூறி அனைவரையும் சிந்திக்க வைத்து கொண்டு இருந்தார் பவா செல்லதுரை. ஆனால், உடல்நிலை காரணமாக திடீரென பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிவிட்டார். இது அவருடைய ரசிகர்களுக்கு பெரும் வருத்ததை கொடுத்தது.
மணி சந்திரா
விஜய் டிவியில் ஒளிபரப்பான நடன நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் மணி சந்திரா. மேலும் சாண்டி மாஸ்டருடன் இணைந்து ஆர்.ஆர்.ஆர், டான் போன்ற முன்னணி நட்சத்திரங்களுடைய படங்களின் ப்ரோமோஷன் விழாக்களில் நடனமாடி அசத்தி இருக்கிறார். நடனத்தின் மூலம் ரசிகர்களை கொண்ட மணி சந்திராவும் பிக் பாஸ் 7ல் வலிமையான போட்டியாளராக இருப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
ரவீனா தாஹா
நடன கலைஞர், சீரியல் நடிகை என பன்முக திறமை கொண்டவர் ரவீனா தாஹா. நடனத்தின் மூலம் சின்னத்திரையில் என்ட்ரி கொடுத்த ரவீனா, மௌன ராகன் சீரியல் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார். இதன்பின் தான் இவருக்கு குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலும் அறிமுகம் கிடைத்தது. மேலும் தற்போது பிக் பாஸ் 7ல் என்ட்ரி கொடுத்துள்ளார்.
விசித்ரா
90ஸ் காலகட்டத்தில் கௌண்டமணி, வடிவேலு போன்ற நட்சத்திரங்களுடன் இணைந்து நடித்துள்ள நடிகை விசித்ரா பின் சினிமாவில் இருந்து சற்று விலகினார். இதன்பின் குக் வித் கோமாளி நிகழ்ச்சி தான் மக்கள் மத்தியில் இவருக்கு நல்ல வரவேற்பை ஏற்படுத்தி கொடுத்தது. குக் வித் கோமாளியை தொடர்ந்து தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக களமிறங்கியுள்ளார்.
ஜோவிகா
பிரபல நடிகை வனிதா விஜயகுமாரின் மகளான ஜோவிகாவிற்கு பிக் பாஸ் நிகழ்ச்சி தான் அறிமுகத்தை ஏற்படுத்தி கொடுத்துள்ளது. தனது தாய் வனிதா போலவே பிக் பாஸ் 7ல் கலக்கி வருகிறார்.
சரவணன் விக்ரம்
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் மூலம் சின்னத்திரையில் அறிமுகமாகி பிரபலமானவர் சரவணன் விக்ரம். இவருடைய இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் கூட ரசிகர்கள் மத்தியில் பிரபலமான ஒன்று. பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நிறைவடையப்போகும் நேரத்தில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் என்ட்ரி கொடுத்துள்ளார். இவரிடம் ரசிகர்களுக்கு அதிக எதிர்பார்ப்பு இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
பிரதீப் ஆண்டனி
நிகழ்ச்சியில் என்ட்ரி கொடுத்த நாளில் இருந்து ஒவ்வொரும் நாளும் கன்டென்ட் கொடுத்து கொண்டே இருக்கும் ஒரே போட்டியாளர் என்றால் அது பிரதீப் ஆண்டனி தான். குறிப்பாக மற்ற போட்டியாளர்களுடன் இவர் வாக்குவாதம் செய்வது தான் அதிக ப்ரோமோக்களில் இடம்பெறுகிறது. இந்த சீசனுடன் முக்கிய போட்டியாளகளில் பிரதீப் ஒருவராக இருப்பார் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை.
மாயா கிருஷ்ணன்
நடிகை, மாடல், பாடகி என பன்முக திறமைகொண்டவர் மாயா கிருஷ்ணன். இவர் கமல் ஹாசன் நடிப்பில் கடந்த ஆண்டு வெளிவந்த விக்ரம் படத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். மேலும் தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சியில் என்ட்ரி கொடுத்துள்ளார். இந்த நிகழ்ச்சியில் இவருடைய செயல்கள் சர்ச்சையிலும் சிக்கியுள்ளது.
பூர்ணிமா
Youtube மூலம் பிரபலமான நட்சத்திரங்களில் ஒருவர் தான் பூர்ணிமா. ஆரத்தி என்று தான் ரசிகர்களுக்கு பூர்ணிமாவை தெரியும். அந்த அளவிற்கு ரசிகர்கள் மத்தியில் youtube இவரை கொண்டு சேர்த்து. சில திரைப்படங்களில் நடித்துள்ள பூர்ணிமா தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சியில் களமிறங்கியுள்ளார். இவருடைய போட்டியை காண ரசிகர்கள் வைட்டிங்.
விஜய் வர்மா
சிறந்த நடன கலைஞர் என பேரெடுத்தவர் விஜய் வர்மா. தளபதி விஜய் நடிப்பில் வெளிவந்த தலைவா படத்தில் அவருடைய நடன குழுவில் ஒருவராக நடித்திருப்பார். அதுவே சினிமா துறையில் இவருக்கு அறிமுகத்தை ஏற்படுத்தி கொடுத்த திரைப்படமாகும். அதை தொடர்ந்து தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமாக வந்துள்ளார்.
நிக்சன்
ராப் பாடல்கள் மூலம் தனது திறமையை வளத்துக்கொண்டவர் நிக்சன். விஜய் ஆண்டனி நடிப்பில் வெளிவந்த திருமிரு புடிச்சவன் படத்தில் ஒரு முக்கிய ரோலில் நிக்சன் நடித்திருப்பார். பிக் பாஸ் 7ல் தனது திறமையை காட்டி மக்கள் மனதில் இடம்பிடிக்க வேண்டும் என என்ட்ரி கொடுத்துள்ள நிக்சனுக்கு முதல் வாரத்திலேயே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.
யுகேந்திரன்
திரையுலகில் பாடகராகவும், நடிகராகவும் பணிபுரிந்தவர் யுகேந்திரன். இவர் பின்னணி பாடகர் மலேசியா வாசுதேவனின் மகன் ஆவார். மேலும் விஜய் நடிப்பில் வெளிவந்த யூத், திருப்பாச்சி போன்ற படங்களில் நடித்துள்ளார். சில ஆண்டுகள் சினிமாவில் இருந்து விலகி வெளிநாட்டில் செட்டிலான யுகேந்திரன் தற்போது பிக் பாஸ் மூலம் மீண்டும் திரைத்துறையில் என்ட்ரி கொடுத்துள்ளார்.
வினுஷா
பாரதி கண்ணம்மா சீரியல் மூலம் தன்னை தமிழ் மக்கள் மத்தியில் அறிமுகம் செய்துகொண்டார் நடிகை வினுஷா. இந்த சீரியல் நிறைவுபெற்ற நிலையில் தற்போது பிக் பாஸ் 7ல் போட்டியாளராக என்ட்ரி கொடுத்துள்ளார். இவர் மீது ரசிகர்களுக்கு பெரும் எதிர்பார்ப்பு இருக்கிறது.
விஷ்ணு
கனா காணும் காலங்கள், ஆபிஸ், சத்யா போன்ற பல சின்னத்திரையில் சீரியல்களில் நடித்து முன்னணி சின்னத்திரை நடிகராக உயர்ந்துள்ளார் விஷ்ணு. இவரும் பிக் பாஸ் 7 போட்டியாளர்களில் ஒருவர். முதல் வாரத்தில் சற்று பின்தங்கி இருந்த விஷ்ணு, இரண்டாவது வாரத்தில் இருந்து தனது அதிரடியான ஆட்டத்தை ஆரம்பித்துள்ளார்.
அனன்யா
இன்ஸ்டாகிராம் மாடல், நடன கலைஞர் மற்றும் நடிகை என பன்முக திறமைகொண்டவர் அனன்யா. முதல் வாரத்தில் ஸ்மால் பாஸ் வீட்டிற்கு சென்ற அனன்யா, மக்களிடம் இருந்து குறைந்து வாக்குகளை பெற்று வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளார். இவருடைய வெளியேற்றம் ரசிகர்களுக்கு சற்று வருத்தத்தை கொடுத்துள்ளது.
அக்ஷயா
கடந்த ஆண்டு பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் வெளிவந்த லவ் டுடே படத்தின் மூலம் இளைஞர்கள் மத்தியில் பிரபலமானவர் அக்ஷயா. இப்படம் இவருக்கு ஓரளவு வரவேற்பை ரசிகர்கள் மத்தியில் ஏற்படுத்தி கொடுத்து இருந்தாலும், பிக் பாஸ் கண்டிப்பாக பெரிய பிரபலத்தை ஏற்படுத்தி கொடுக்கும் என நிகழ்ச்சியில் என்ட்ரி கொடுத்துள்ளார்.
ஐஷு
கடந்த பிக் பாஸ் 5ல் போட்டியாளராக களமிறங்கியவர் அமீர். இவருடைய நடன பள்ளியில் இருந்து பிக் பாஸ் 7ல் என்ட்ரி கொடுத்துள்ளார் ஐஷு. ஏற்கனவே பிக் பாஸ் 6ல் அமீரை சந்திக்க ஐஷு தனது குடும்பத்துடன் வீட்டிற்குள் வந்து இருக்கிறார். ஆனால், இவரே தற்போது போட்டியாளராக வந்துள்ளதால் மக்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பு இருக்கிறது.
இந்த 18 போட்டியாளர்களின் ஏற்கனவே இரண்டு பேர் வெளியேறியுள்ள நிலையில், இந்த வாரம் விஷ்ணு, விசித்ரா, பூர்ணிமா, பிரதீப், மாயா, ஜோவிகா மற்றும் அக்ஷயா நாமினேட் செய்யப்பட்டுள்ளனர். இதில் உங்களுடைய வாக்கு யாருக்கென்று இந்த Voting Poll-ல் பதிவு செய்யுங்கள்..
பொறுப்பு துருப்பு
சினிஉலகம் சார்பில் இருந்து மட்டுமே இந்த Voting Poll நடத்தப்படுகிறது. இதற்கும் அதிகாரபூர்வமாக பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் நடத்தப்படும் வாக்கு செலுத்தலுக்கும் எந்த ஒரு சம்மந்தமும் இல்லை. இது சினிஉலகம் சாரிப்பில் இருந்து நடத்தப்படும் கருத்து கணிப்பு மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.