ரவீனா உடன் காதலா?..வெளிப்படையாக பேசிய மணி

பிக் பாஸ்
கடந்த 1-ம் தேதி தொடங்கிய பிக் பாஸ் சீசன் 7 தற்போது சண்டைக்கு பஞ்சமில்லாமல் நடந்து வருகிறது.

இதில் கூல் சுரேஷ், பிரதீப் ஆண்டனி, ரவீனா தாஹா, வினுஷா தேவி, விஷ்ணு விஜய், மாயா எஸ்.கிருஷ்ணா, விசித்திரா, யுகேந்திரன் வாசுதேவன், பவா செல்லத்துரை, மணி சந்திரா, அனன்யா உள்பட மொத்தம் 18 போட்டியாளர்கள் பங்கேற்றனர்.

கடந்த வாரம் மக்கள் குறைந்து வாக்குகள் கொடுத்ததால் அனன்யா ராவ் வெளியேறி விட்டார். மேலும் உடல் நிலை குறைவால் பவா செல்லத்துரை வெளியேறினார்.

காதலா?
இந்நிலையில் விசித்ரா மணி சந்திரா மற்றும் ரவீனாவிடம், நீங்கள் இருவரும் காதலர்கள் தானே என்று கேட்டார்.

இதற்கு பதில் அளித்த ரவீனா, நாங்க இருவரும் நெருங்கிய நண்பர்கள் என சொன்னார். இது தொடர்பாக பேசிய மணி “நீங்க பேசியே வரவச்சுடுவீங்க என்று விசித்ராவிடம் என்று கூறினார். அதுக்கு உடனே ரவீனா செல்லமாக மணி கன்னத்தில் ஆராய்ந்துள்ளார்.

தற்போது அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ வீடியோ.