ரத்தம்
இயக்குனர் சி.எஸ்.அமுதன் இயக்கத்தில் நடிகர் விஜய் ஆண்டனி நடிப்பில் ‘ரத்தம்’ திரைப்படம் கடந்த அக்டோபர் 6-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது.
இப்படத்தில் மஹிமா நம்பியார், நந்திதா ஸ்வேதா, ரம்யா நம்பீசன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
கிரைம் த்ரில்லர் கதைக்களத்தில் உருவாகியுள்ள உள்ள ரத்தம் திரைப்படத்தில் பெரும்பாலான சூழ்நிலைகள், திருப்பங்களும் கணிக்க முடியாதவை இருந்ததால் ரசிகர்கள் நல்ல விமர்சனம் கொடுத்தனர்.
வசூல்
இந்நிலையில், கடந்த 5 நாட்களில் ரத்தம் திரைப்படம் தமிழ்நாட்டில் மட்டும் ரூ.9.47 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.