விஜய் டிவி
நிறைய புத்தம் புது நிகழ்ச்சிகளுக்கு பெயர் போன ஒரு தொலைக்காட்சி விஜய். பாடல், நடனம், பேச்சு போட்டு என நிறைய வித்தியாசமான ஷோக்கள் உள்ளன. அந்த நிகழ்ச்சிகளுக்கு இணையாக சூப்பரான தொடர்களும் ஒளிபரப்பாகி வருகிறது.
பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பங்கள் கொண்டாடும் தொடராக இருந்து வந்தது, தற்போது இதுவும் விரைவில் முடிவுக்கு வர இருக்கிறது.
மேலும் புத்தம் புதிய தொடர்களும் நாளுக்கு நாள் மக்களை கவர்ந்து டிஆர்பியில் டாப்பில் வந்து கொண்டிருக்கின்றன.
சமீபத்தில் தொடங்கப்பட்ட சிறகடிக்க ஆசை தொடர் எல்லாம் இப்போது டாப்பில் இருக்கிறது.
முடியும் தொடர்
கடந்த சில வாரங்களாக பாண்டியன் ஸ்டோர்ஸ் முடிவுக்கு வர இருப்பதாக செய்திகள் சமூக வலைதளங்களில் உலா வர இப்போது உறுதியாகியுள்ளது. இந்த நிலையில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் மேலும் ஒரு தொடர் முடிவுக்கு வர இருக்கிறதாம்.
மதிய நேரத்தில் ஒளிபரப்பாகும் தென்றல் வந்து என்னை தொடும் தொடர் விரைவில் முடிவடைய இருக்கிறதாம், இந்த செய்தி சீரியல் ரசிகர்களுக்கு ஒரு ஷாக்கிங் தகவலாக அமைந்துள்ளது.
View this post on Instagram