விடாமுயற்சி
விடாமுயற்சி படப்பிடிப்பு தற்போது அசர்பைஜானில் நடைபெற்று வருகிறது. இந்த படப்பிடிப்பில் யாரும் எதிர்பார்க்காத விதமாக கலை இயக்குனர் மிலன் மரணமடைந்தார்.
தற்போது மிலனுடன் வேலைகளை அவருடைய மகன் தான் படப்பிடிப்பில் இருந்து பார்த்துக்கொள்கிறார் என தகவல் வெளியாகியுள்ளது. மகிழ் திருமணி இயக்கி வரும் இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பில் அஜித் மற்றும் திரிஷா இடையிலான காட்சி தான் படமாக்கப்பட்டு வருகிறதாம்.
இப்படத்தில் அஜித்துடன் இணைந்து ரெஜினா, அர்ஜுன், ஆரவ் உள்ளிட்டோர் நடிக்கிறார்கள். முதலில் பாலிவுட் நடிகை ஹுமா குரேஷி நடிப்பதாக கூறிய நிலையில், அவருக்கு பதிலாக ரெஜினா இப்படத்தில் நடிக்க கமிட்டானார்.
மூன்றாவது ஹீரோயின்
இந்நிலையில், திரிஷா ரெஜினாவை தொடர்ந்து வேறொரு நடிகையும் விடாமுயற்சி படத்தில் இணைந்துள்ளார். அவர் வேறு யாருமில்லை நடிகை பிரியா பவானி ஷங்கர் தான்.
ஆம், சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு என்ட்ரி கொடுத்து தற்போது பிஸியான நடிகையாக மாறியுள்ளார் பிரியா பவானி ஷங்கர் தான் விடாமுயற்சி படத்தில் மூன்றாவது ஹீரோயினாக இணைந்துள்ளார். விரைவில் இவர் படப்பிடிப்பில் இணைவார் என கூறப்படுகிறது.