விஜயுடன் நடித்த அனுபவத்தை பகிர்ந்த ஜனனி

லியோ
மாஸ்டர் படத்தை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் – விஜய் கூட்டணியில் உருவான லியோ படம் இன்று பிரமாண்டமாக வெளியானது.

படத்தை பார்த்த ரசிகர்கள் பெரும்பாலானோர் நல்ல விமர்சனமே கொடுத்து வருகின்றனர். இதனால் லியோ படம் ஜெயிலர் படத்தின் வசூலை தாண்டி விடும் என்று சினிமா வட்டாரங்களில் பேசப்படுகிறது.

பிக் பாஸ் ஜனனி
இந்நிலையில் லியோ படத்தில் முக்கியமான ரோலில் நடித்துள்ள பிக் பாஸ் ஜனனி, விஜய்யுடன் நடித்த அனுபவத்தை பகிர்ந்துள்ளார்.

அதில் அவர் கூறுகையில், நான் விஜய் சார் உடன் சேர்ந்து நடித்ததில் நான் மிகவும் மகிழ்ச்சியும் பெருமையும் அடைகிறேன். இப்படத்தில் எனக்கு நடிக்க வாய்ப்பு கொடுத்த லோகேஷ் கனகராஜ் அவருக்கு நன்றி என்று கூறியுள்ளார்.