சிவகார்த்திகேயன்
தமிழ் சின்னத்திரையில் எந்த ஒரு சினிமா பின்னணியும் இல்லாமல் தனது சொந்த திறமையால் தொலைக்காட்சியில் தோன்றியவர் சிவகார்த்திகேயன். காமெடி ஷோ அவருக்கு கைகொடுக்க அப்படியே நடனம், தொகுப்பாளர் என கலக்கி வந்தார்.
இப்போது அதே டிவிக்கு சிறப்பு விருந்தினராக பல நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு இருக்கிறார். சினிமாவிலும் அசுர வளர்ச்சி பெற்றுள்ள அவரது பெயர் சமீப நாட்களாக ஒரு சர்ச்சையில் சிக்கி வருகிறார்.
டி. இமான் ஒரு பேட்டியில் சிவகார்த்திகேயன் தனக்கு துரோகம் செய்துவிட்டார் என கூற இப்போது அது பெரிய பிரச்சனையாக வெடித்துள்ளது.
நடிகரின் பழக்கம்
அண்மையில் சிவகார்த்திகேயனுடன் டாக்டர் மற்றும் டான் படத்தில் நடிக்க நடிகை பிரியங்கா மோகன் ஒரு பேட்டி கொடுத்துள்ளார். அதில் அவர், சிவகார்த்திகேயனின் வீக்னஸ் பற்றி தெரிவித்துள்ளார்.
அதாவது அவருக்கு இனிப்பு சாப்பிடுவது என்றால், மிகவும் பிடிக்குமாம். அவர் அதற்கு அடிமையாகி விட்டதாகவும், ஷூட்டிங் ஸ்பாட்டில் எப்போதுமே ஏதாவது இனிப்பான பலகாரங்களை சாப்பிட்டு கொண்டே இருப்பார் என தெரிவித்துள்ளார்.