தற்போதைய காலகட்டத்தில் சினிமா ஹீரோயின்களுக்கு நிகராக சின்னத்திரை சீரியல் ஹீரோயின்களும் பாப்புலராக இருக்கின்றனர். குறிப்பாக சன் டிவி மற்றும் விஜய் டிவி தொடர்களில் வரும் நாயகிகள் மிக விரைவில் லட்சக்கணக்கில் ரசிகர்களை சமூக வலைதளங்களில் பெற்றுவிடுகிறார்கள்.
அந்த வகையில் சன் டிவியில் அன்பே வா தொடரின் மூலம் பாப்புலர் ஆனவர் டெல்னா டேவிஸ். அவருக்கு மிகப்பெரிய ரசிகர் கூட்டமும் இருக்கிறது.
சன் டிவியில் 900 எபிசோடுகளை கடந்து ஓடிக் கொண்டிருக்கிறது அன்பே வா சீரியல். நல்ல ரேட்டிங் கிடைத்து வரும் அந்த தொடருக்கு ஒரு பெரிய ரசிகர் கூட்டமும் இருந்து வருகிறது.
பூமிகா மரணம்
அன்பே வா தொடரில் தற்போது ஹீரோயின் பூமிகா கதாப்பாத்திரம் இறந்து விடுவது போல காட்டப்பட்டிருக்கிறது. இது அந்த சீரியல் ரசிகர்களுக்கு மிகப்பெரிய அதிர்ச்சியை கொடுத்திருக்கிறது.
அதனால் இனி நடிகை டெல்னா அன்பே வா தொடரில் நடிக்க மாட்டார் என்பதும் ரசிகர்களுக்கு தெரிய ஏமாற்றமாக அமைந்திருக்கிறது.
View this post on Instagram