இந்தியன் 2 படப்பிடிப்பில் இருந்து வெளியான காட்சி

இந்தியன் 2
பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் – உலக நாயகன் கமல் ஹாசன் காம்போவில் உருவாகி வருகிறது இந்தியன் 2.

முதல் பாகம் கடந்த 1996ஆம் ஆண்டு வெளிவந்து வெற்றியடைந்த நிலையில், அதனுடைய தொடர்ச்சியாக தான் இந்தியன் 2 உருவாகி வருகிறது.

இதை தொடர்ந்து இந்தியன் 3 படமும் ஒரே நேரத்தில் உருவாகி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. அடுத்த ஆண்டு இந்தியன் 2 மற்றும் இந்தியன் 3 என இரு திரைப்படங்களும் வெளியாகும் என கூறப்படுகிறது.

சமீபத்தில் தான் இந்தியன் 2 படத்திலிருந்து சேனாபதியின் இன்ட்ரோ வீடியோ வெளிவந்தது. மக்கள் மத்தியில் இந்த இன்ட்ரோ வீடியோவிற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.

லீக்கான வீடியோ
இந்நிலையில், படக்குழுவிற்கு அதிர்ச்சி கொடுக்கும் வகையில் இந்தியன் 2 படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்டு வரும் காட்சி ஒன்று இணையத்தில் லீக்காகியுள்ளது. இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் படுவைரலாகி வருகிறது.

இதோ அந்த வீடியோ..