அனைத்திற்கும் முற்றுப்புள்ளி வைத்த பிக்பாஸ் பிரதீப்

பிக் பாஸ் 7ம் சீசனில் இருந்து பிரதீப் ஆண்டனி கடந்த வாரம் ரெட் கார்டு மூலமாக எலிமினேட் செய்யப்பட்டார்.

அவரை கடைசியாக எச்சரித்து விட்டிருக்கலாம், பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என மிகைப்படுத்தப்பட்ட காரணத்தை கூறி எலிமினேட் செய்துவிட்டனர் என நெட்டிசன்கள் அப்போது இருந்து விமர்சித்து வருகிறார்கள்.

இந்நிலையில் பிரதீப் ஆண்டனி மீண்டும் வைல்டு கார்டு எண்ட்ரியாக வர கண்டிஷன்கள் போட்டு பதிவிட்டு இருந்தார். அதனால் அவர் மீண்டும் ஷோவுக்கு வருவாரா என எதிர்பார்ப்பு எழுந்தது.

கேம் ஓவர்

இந்நிலையில் தற்போது ‘கேம் ஓவர்’ என குறிப்பிட்டு பிரதீப் ட்விட்டரில் பதிவிட்டு இருக்கிறார்.

“கேம் ஓவர், ரெண்டு கை ரெண்டு கால் இல்லனா கூட காளின்றவன் பிழைச்சிப்பான் சார். கெட்ட பையன் சார் அவன். வாழ்த்திய மனங்களுக்கு என் வாழ்க்கையை வாங்கிவிட்டேன். நல்லா இருங்க” என பிரதீப் பதிவிட்டு இருக்கிறார்.

அதனால் பிரதீப் இனி பிக் பாஸ் வர போவது இல்லை என்பது உறுதியாகி இருக்கிறது.