எதிர்நீச்சல் சீரியலில் 40% சொத்து யாருக்கு!

எதிர்நீச்சல் சீரியல்
சன் தொலைக்காட்சியில் காலை 10 மணி முதல் இரவு 10 வரை தொடர்ந்து சீரியல்கள் ஒளிபரப்பாகிறது, இடையில் மட்டும் ஒரு திரைப்படம் வரும்.

அப்படி காலையில் இருந்து இரவு வரை ஒளிபரப்பாகும் தொடர்களில் டாப் இருக்கும் தொடராக உள்ளது எதிர்நீச்சல்.

கோலங்கள் தொடருக்கு பிறகு அழுத்தமான கதைக்களத்தில் திருச்செல்வம் அவர்கள் இயக்கிவரும் இந்த எதிர்நீச்சல் தொடருக்கு ரசிகர்கள் கூட்டம் அதிகம்.

ஆணாதிக்கம், பெண்அடிமை என சமூகத்தில் இன்னும் நடக்கும் விஷயத்தை காட்டி வருகிறது.

தீயான புரொமோ
இப்போது கதைக்களத்தில் குணசேகரன் ஏற்பாடு செய்த திருவிழாவும், அப்பத்தாவின் நிகழ்ச்சியும் பரபரப்பின் உச்சமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இன்று ஒரு பரபரப்பான புரொமோ நிகழ்ச்சி குறித்து வந்துள்ளது.

அதில் அப்பத்தா தனது 40 % சொத்து யாருக்கு என்று கூறுகிறார், அதற்கு அடுத்த நொடியே மேடையில் நின்றவர்கள் மீது குண்டு பாய்கிறது.

ஆனால் யாருக்கு என்ன நடந்தது என்பது தெரியவில்லை, அந்த பரபரப்பான புரொமோ இதோ,