வெங்கட் பிரபு பார்ட்டியில் கலந்துகொள்ளாத விஜய்.. அதற்க்கு இதுதான் காரணமா?

தளபதி 68
விஜய் தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் நடித்து வரும் திரைப்படம் தளபதி 68. ஏ ஜி எஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகும் இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார்.

பெரிதும் எதிர்பார்ப்பில் உருவாகி வரும் இப்படத்தில் விஜய்யுடன் இணைந்து பிரஷாந்த், மோகன், பிரபு தேவா, லைலா, சினேகா, மீனாட்சி சவுத்ரி என பல நட்சத்திரங்கள் நடிக்கிறார்கள்

முதற்கட்ட படப்பிடிப்பு நடந்து முடிந்த நிலையில் இரண்டாம்கட்டபடப்பிடிப்பு தாய்லாந்தில் துவங்கியுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன் இயக்குனர் வெங்கட் பிரபுவின் பிறந்தநாள் வந்தது. திரையுலக நட்சத்திரங்கள் பலரும் இவருடைய பிறந்தநாளுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

பார்ட்டியில் விஜய் இல்லை
தாய்லாந்தில் உள்ள வெங்கட் பிரபு தளபதி 68 படக்குழுவுடன் யார்ட் போட்டில் விமர்சையாக தனது பிறந்தநாளை கொண்டாடியுள்ளனர். தளபதி 68 படக்குழுவில் இருந்த அனைவரும் இந்த பார்ட்டியில் கலந்துகொண்ட நிலையில், தளபதி விஜய் மட்டும் இந்த பார்ட்டியில் கலந்துகொள்ளவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.

பார்ட்டியில் மது இருக்கும் என்பதினால் தான் நடிகர் விஜய் கலந்துகொள்ள வில்லை என கூறப்படுகிறது. இந்த தகவலை பிரபல பத்திரிகையாளர் ஒருவர் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.