நுவரெலியாவை சேர்ந்த இளைஞன் ஒருவர் 131 மணித்தியாலங்கள் நடனமாடி உலக சாதனை படைத்துள்ளார்.
குறித்த உலக சாதனைக்கான நடனம் international warriors book of world records ஒழுங்கமைப்பில் இடம்பெற்றிருந்தது.
நுவரெலியாவை சேர்ந்த தாயாபரனே என்ற இளைஞனே உலக சாதனையை படைத்துள்ளார்.
குறித்த நடனத்தை இந்தியாவில் இருந்து ரகசிய கண்காணிப்பு கமாரா மூலமாக international warriors book of world records அமைப்பு நடனத்தை பார்வையிட்டிருந்தனர்.
லயன் யூட் நிமலன் நெறியாள்கையில் சர்வதேச சட்ட நியதிகளுக்கமைவாக ஆறு நாட்களாக இடம்பெற்றிருந்த குறித்த நிகழ்வில் மதகுரு, யோகபுரம் மகாவித்தியாலய அதிபர் த.பிறேமச்சந்திரன், அணிஞ்சியன்குளம் கிராம அலுவலர் வினோதன் துசாந்தி, மல்லாவி தமிழ்த்தாய் கலமான்றத்தின் யோகநாதன், லயன் சு.சுபநேசன், கலைஞர்கள், ஆசிரியர்கள், நலன்விரும்பிகள் என பலரும் கலந்துகொண்டிருந்தனர்.
மல்லாவியில் உள்ள தொழில்நுட்ப கலாசாரம் மற்றும் பெண்கள் மேம்பாட்டு அமையத்தில் இடம்பெற்ற இந் நிகழ்வின் இறுதியில் போட்டியாளர் தயாபரனுக்கான கௌரவம் வழங்கப்பட்டு அவருக்கான மின்னிதழ் சான்றிதழும் வழங்கி வைக்கப்பட்டது