திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நடிகர் விஜயகாந்த்

தமிழ் சினிமாவில் கேப்டன் என கொண்டாடப்பட்டு வருபவர் நடிகர் விஜயகாந்த். இவர் நடிப்பில் வெளிவந்த பல படங்கள் இன்றும் நம் மனதில் இருந்து நீங்கா இடத்தை பிடித்துள்ளது.

சினிமாவின் உச்சத்தை தோட்ட விஜயகாந்த் அரசியலில் களம்புங்குந்தார். சினிமா மட்டுமின்றி அரசியலிலும் பட்டையை கிளப்பி வரும் திடீரென ஏற்பட்ட உடல்நல குறைவு காரணமாக கடந்த சில ஆண்டுகளாக மருத்துவ சிகிச்சையில் இருந்து வருகிறார்.

மருத்துவமனையில் விஜயகாந்த்
இந்நிலையில், 71 வயதாகும் நடிகர் விஜயகாந்த் திடீரென உடல்நல குறைவு காரணாமாக சென்னையில் உள்ள பிரபல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நடிகர் விஜயகாந்திற்கு தற்போது சிகிச்சை அளித்து வரும் நிலையில் வழக்கமான மருத்துவ பரிசோதனைக்காக தான் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என கூறப்படுகிறது. ஆனாலும் கூட விஜயகாந்தின் உடல்நிலை குறைத்து பலவிதமான தகவல்கள் உலா வருகிறது.

விளக்கம்
இந்நிலையில் இதுகுறித்து தேமுதிக விளக்கம் கொடுத்துள்ளது. இதில் ‘தேமுதிக தலைவர் விஜயகாந்த் வழக்கமான மருத்துவ பரிசோதனைக்காக தான் சென்றுள்ளார். ஓரிரு நாட்களில் வீடு திரும்புவார். வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம்’ என தெரிவித்துள்ளனர்.