நடிகை ஆயிஷா
ஆயிஷா தமிழ் திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சி தொடர்களில் நடித்தவர். விஜய் டிவியில் ஒளிபரப்பான பொன்மகள் வந்தாள் மூலம் தமிழில் தனது தொலைக்காட்சி பயணத்தை தொடங்கியவர். அந்த தொடர் இயக்குனருடன் கருத்து வேறுபாடு ஏற்பட தொடரில் இருந்து விலகி இருந்தார்.
அடுத்து ஜீ தமிழில் ஒளிபரப்பான சத்யா என்ற தொடரில் நடித்தார், இந்த சீரியல் ஆயிஷாவிற்கு நல்ல ரீச் கொடுத்தது. ஜீ தமிழில் ஒளிபரப்பான சூப்பர் குயின் ரியாலிட்டி ஷோவில் கலந்துகொண்டவர் அதேநேரம் தெலுங்கில் சாவித்ரிம்மா கரி அப்பாயி என்ற தொடரில் நடித்தார், பின் பிக்பாஸ் ஷோவிலும் கலந்துகொண்டார்.
புதிய சீரியல்
இந்த நிலையில் ஆயிஷா தெலுங்கில் ஸ்டார் மாவில் புது தொடரில் நடிக்கிறாராம். இதில் இரண்டு விதமான கதாபாத்திரத்தில் நடிக்கிறாராம்.
இதுகுறித்த வீடியோ வெளியாக ரசிகர்கள் அவருக்கு வாழ்த்து கூறி வருகிறார்கள்.