தினேஷ்
பிக் பாஸ் சீசன் 7 ல் போட்டியாளராக இருக்கும் தினேஷ், சமீபத்தில் நடந்த டாஸ்கில் தனது மனைவி ரச்சிதா பிரிந்து வாழ்ந்து வருவதை குறித்து பேசியிருந்தார்.
பிரிய காரணம்?
இந்நிலையில் ரச்சிதா மற்றும் தினேஷ் பிரிவு பற்றி தினேஷின் நண்பரும் சீரியல் நடிகருமான சரத் சந்திரா சில தகவல்களை பகிர்ந்துள்ளார்.
அதில் அவர், தினேஷூக்கும் எனக்கும் பல வருட நட்பு இருக்கிறது. தினேஷ் எங்கள் வீட்டில் ஒருவராக தான் பார்க்கிறேன். என்னுடைய குழந்தைக்கு தாய் மாமனாக தினேஷ் மடியில் வைத்து தான் மொட்டை போட்டோம்.
அதே போல ரச்சிதாவும் எனக்கு தங்கச்சி மாதிரி தான். அவர்களுக்கு இடையே என்ன பிரச்சனை என்று தெரியவில்லை.
தினேஷுக்கு பிக் பாஸ் செல்ல வேண்டும் என்பது தான் ஆசை. கடந்த சீசனில் ரச்சிதா டைட்டில் பட்டத்தை வாங்குவார் என்று தினேஷ் அதிகமாக நம்பினான். ஆனால் அப்படி நடக்காததால் தினேஷ் ரொம்பவே வருத்தம் அடைந்தார் என்று சரத் சந்திரா கூறியுள்ளார்.