லியோ
சமீபத்தில் தளபதி விஜய்யின் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் லியோ. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவான இப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று மாபெரும் வசூல் சாதனை படைத்துள்ளது.
இப்படத்திற்கான ப்ரோமோஷன்களில் லோகேஷ் கனகராஜ் கலந்துகொண்டபோது, இப்படத்தில் விஜய் டூப் போடாமல் நடித்துள்ளார் என கூறினார். ஆனால், தற்போது அப்படி கூறி மாட்டிகொண்டோரோ என கேள்வி எழுந்துள்ளது.
விஜய்யின் டூப்
நடிகர் விஜய்க்கு தொடர்ந்து பல படங்களில் டூப் போட்டு வரும் நபர் லியோ படத்தின் படப்பிடிப்பில் லோகேஷ் கனகராஜுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் வெளியாகியுள்ளது.
பிகில், பீஸ்ட், வாரிசு என தொடர்ந்து விஜய் நடிக்கும் படங்களில் அவர் தான் விஜய்க்கு டூப் போட்டு வருகிறார்.
லியோ படத்தில் விஜய் டூப் போடவில்லை என லோகேஷ் கூறியதன்பின், விஜய்க்கு டூப் போடும் நபர் லியோ படப்பிடிப்பில் என்ன செய்கிறார் என பலரும் கேள்வி எழுப்பி வருகிறார்கள். இதோ அந்த புகைப்படம்..