KGF என்ற படத்தின் மூலம் ராஜ வாழ்க்கை வாழும் நடிகர் யஷ்

நடிகர் யஷ்
நாடக கலைஞராக தனது பயணத்தை தொடங்கி சினிமாவில் கலக்கும் பிரபலங்கள் பலர் உள்ளார்கள், அதில் ஒருவர் கன்னட திரைப்பட நடிகர் யஷ்.

கன்னட சீரியல்களில் நடித்துவந்த யஷ் கடந்த 2008ம் ஆண்டு தான் சினிமாவிற்கும் நுழைந்தார்.

அவர் முதன்முதலில் நடித்த ராக்கி திரைப்படம் படு தோல்வியடைய பின் மற்ற மொழி படங்களை ரீமேக் செய்து நடித்துவந்தார். தொடர்ந்து நடித்துவந்த யஷ் வாழ்க்கையில் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது கேஜிஎப் படம் தான்.

2018ம் ஆண்டு இப்பட முதல் பாகம் வெளியாக நல்ல ஹிட் படமாக அமைந்தது. இதோடு இரண்டாம் பாகமும் வெளியாகி ரூ. 1100 கோடிக்கு மேல் வசூலித்து வெற்றிவாகை சூடியது.

சொத்து மதிப்பு
கேஜிஎப் படம் வெற்றியடைந்ததும் பெங்களூருவில் ரூ. 4 கோடி மதிப்பிலான சொகுசு பங்களாவை வாங்கினார். ஒற்றை படத்தின் மூலம் புகழின் உச்சிக்கு சென்ற நடிகர் யஷ் சொத்து மதிப்பு ரூ. 53 கோடி இருக்கும் என கூறப்படுகிறது.