ஜெயிலர்
இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவான ஜெயிலர் திரைப்படம் கடந்த ஆகஸ்ட் மாதம் 10-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது.
இதில் ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு, விநாயகன், வசந்த் ரவி நடித்திருந்தனர். மேலும் கெஸ்ட் ரோல்களில் மலையாள நட்சத்திரம் மோகன்லால், கன்னட நடிகர் சிவராஜ்குமார், பாலிவுட் நடிகர் ஜாக்கி ஷெராஃப் ஆகியோரும் நடித்து இருந்தனர்.
ஜெயிலர் திரைப்படம் ரூபாய் 600 கோடிக்கு மேல் வசூல் செய்து மாபெரும் வெற்றி பெற்றது.
டிஆர்பி ரேட்டிங்
இந்நிலையில் ஜெயிலர் படத்தின் டிஆர்பி ரேட்டிங் பற்றிய தகவல் தற்போது வெளியாகி உள்ளது. அதில் இப்படம் 15.59 புள்ளி டிஆர்பி ரேட்டிங் பெற்றது இருப்பதாக கூறப்படுகிறது.