பருத்திவீரன் படத்தில் முதலில் நடிக்க வைக்க விரும்பிய ஹீரோ இவர்தான்

பருத்திவீரன் படம்
இயக்குனர் அமீர் இயக்கத்தில் நடிகர் கார்த்தி அறிமுகமான திரைப்படம் பருத்திவீரன்.

பிரியாமணி, சரவணன், கஞ்சா கருப்பு, சம்பத்ராஜ், சுஜாதா சிவக்குமார் உள்ளிட்ட பலர் நடித்த இந்த படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

கடந்த 2007ம் ஆண்ட பிப்ரவரி 23ம் தேதி வெளியான இந்த திரைப்படம் 300 நாட்களை கடந்து திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடியது.

காதல், ஜாதி என பக்கா கிராமத்து பின்னணியில் படம் வெளியாகி மாஸ் வெற்றி கண்டது.
முதல் சாய்ஸ்
இந்த படம் நடிகர் கார்த்தியின் திரைப்பயணத்திற்கு ஆரம்ப படமாக இருந்தது. முதல் படமே அவருக்கு ஓஹோ என்ற வாழ்க்கையை கொடுத்தது என்றே கூறலாம்.

ஆனால் இந்த படத்தில் கார்த்தி பதிலாக முதலில் நடிகர் சூர்யாவை நடிக்க வைக்க தான் அமீர் ஆசைப்பட்டாராம். இந்த தகவலை அவரே ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார்.