விளையாட்டுத்துறை அமைச்சர் ரொசான் ரணசிங்க பதவி நீக்கம்!

விளையாட்டுத்துறை அமைச்சர் ரொசான் ரணசிங்க அனைத்து விதமான பொறுப்புகளிலுமிருந்தும் பதவியிலிருந்தும் நீக்கப்பட்டுள்ளார்.

இவரை பதவி நீக்குவதற்கான நடவடிக்கை ஜனாதிபதி இன்றைய தினம் (2023.11.27) நாடாளுமன்றில் முன்னெடுத்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அண்மைய காலங்களில் ஸ்ரீலங்கா கிரிக்கெட் தொடர்பில் பல்வேறு பிரச்சினைகள் நிலவி வருகின்றன.

இந்த நிலையில், தற்போதைய சூழலில் தமது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டால் அதற்கான முழு பொறுப்பையும், ஜனாதிபதியும், சகல ரத்நாயக்கவுமே ஏற்க வேண்டும் என விளையாட்டுத்துறை அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.