நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் மகனான பிரபு தமிழ் சினிமாவில் ஹீரோவாக இருந்து தற்போது முன்னணி குணச்சித்திர நடிகராக இருந்து வருகிறார். அப்பா ரோல் என்ற பல இயக்குனர்கள் அவரை தான் தேடி செல்கிறார்கள்.
பிரபுவின் மகன் விக்ரம் பிரபுவும் கோலிவுட்டில் வளர்ந்து வரும் நடிகராக இருந்து வருகிறார். இந்நிலையில் தற்போது நடிகர் பிரபுவின் மகளுக்கு வரும் டிசம்பர் 15ம் தேதி திருமணம் நடைபெற இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
ஆதிக் ரவிச்சந்திரன்
சமீபத்தில் மார்க் ஆண்டனி படம் மூலமாக பெரிய ஹிட் கொடுத்த ஆதிக் ரவிச்சந்திரனை தான் பிரபுவின் மகள் காதலிக்கிறாராம். தற்போது இரண்டு வீட்டாரின் சம்மதத்துடன் அவர்கள் திருமணம் நடைபெற இருக்கிறது. இந்த தகவலை பத்ரிக்கையாளர் பிஸ்மி தெரிவித்து இருக்கிறார்.
அதிகாரபூர்வ அறிவிப்பு பிரபு குடும்பத்தில் இருந்து விரைவில் வரும் என எதிர்பார்க்கலாம். ஆதிக் ரவிச்சந்திரன் அடுத்து அஜித் நடிக்கும் படத்தை இயக்க இருப்பது குறிப்பிடத்தக்கது.