புதிதாக தயாரிப்பு நிறுவனம் ஆரம்பித்த லோகேஷ் கனகராஜ்!

லோகேஷ் கனகராஜ் தான் தற்போது கோலிவுட்டில் உச்சத்தில் இருக்கும் இயக்குனர்களில் ஒருவர். விஜய்யின் லியோ படம் மிகப்பெரிய வசூல் சாதனை படைத்த நிலையில் அடுத்து அவர் ரஜினியின் 171வது படத்தை இயக்க இருக்கிறார்.

அந்த படத்திற்கான கதை எழுதும் பணிகளில் லோகேஷ் தற்போது பிசியாக ஈடுபட்டு இருக்கும் நிலையில், தான் ஒரு தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி இருப்பதாக அறிவித்து இருக்கிறார்.

G Squad
ஐந்து படங்களை இயக்கிய பிறகு நான் எனது சொந்த தயாரிப்பு நிறுவனமான G Squad-ஐ தொடங்குகிறேன். Entertainment மற்றும் Story Telling ஆகியவற்றில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் நோக்கில் இந்த நிறுவனம் செயல்படும்.

முதலில் சில படங்கள் எனது நண்பர்கள் மற்றும் அசிஸ்டெண்டுகள் உடன் தான் இருக்கும். இதுவரை எனக்கு கொடுத்த ஆதரவை இனியும் எனது நிறுவனத்திற்கு கொடுங்க என லோகேஷ் கனகராஜ் அறிக்கை வெளியிட்டு இருக்கிறார்.

“Keep Calm and wait for the update of our first production venture” என லியோ ஸ்டைலில் அவர் கூறி இருக்கிறார்.