சிறுவயது போட்டோ
டிரெண்ட் என்ற விஷயம் இப்போது எல்லா இடத்திலும் வந்துவிட்டது, சமூக வலைதளம் மட்டும் விதிவிளக்கா என்ன. கொரோனா கால கட்டத்திற்கு பிறகு இந்த ஒரு விஷயம் டிரெண்ட் ஆகிறது.
அதாவது பிறந்தநாளின் போது பிரபலங்களின் சிறுவயது புகைப்படம் சமூக வலைதளங்களில் வலம் வருவது வழக்கம் ஆகிவிட்டது. ஸ்பெஷல் தினம் மட்டுமில்லை இப்போது பிரபலங்கள் பலரின் புகைப்படங்கள் வைரலாகி வருகிறது
முக்கிய பிரபலம்
தற்போது இரு பிரபலங்கள் ஒன்றாக இருக்கும் புகைப்படம் ஒன்று சமூக வலைதளத்தில் வலம் வருகிறது.
அண்மையில் தனது 46வது பிறந்தநாளை கொண்டாடிய நடிகரும், அமைச்சருமான உதயநிதி ஸ்டாலினின் சிறுவயது புகைப்படத்தை நடிகர் சுந்தர் ராமு தனது டுவிட்டரில் ஷேர் செய்துள்ளார்.
அண்மையில் இவர் மாரி செல்வராஜ் இயக்கிய மாமன்னன் படத்தில் நடித்திருந்தார். அரசியலில் ஈடுபட்டதால் இதுவே தனது கடைசி படம் என கூறியிருந்த உதயநிதிக்கு அப்படம் மாபெரும் வெற்றியை கொடுத்தது. கடைசி படமே செம ஹிட் படமாகவும் அமைந்துவிட்டது.
அப்புகைப்படம் தான் சமூக வலைதளத்தில் ரசிகர்களால் டிரெண்ட் செய்யப்பட்டு வருகிறது. இதோ அவரது பதிவு,
I’ve celebrated your b’day from when we were lil kids and will continue to keep wishing you well for the rest of your journey. Hope you have a wonderful one. 😁 @Udhaystalin pic.twitter.com/1nW277GWHb
— sunder ramu (@sunderramu) November 27, 2023