அமீரை சந்தித்த வெற்றிமாறன்

கார்த்தி 25 என குறிப்பிட்டு ஜப்பான் பட விழாவை பெரிதாக நடத்திய சூர்யா-கார்த்தி குடும்பம் ஏன் பருத்திவீரன் படம் கொடுத்த இயக்குனர் அமீரை அழைக்கவில்லை என்கிற சர்ச்சை தொடங்கி, அமீரை பற்றி ஸ்டூடியோ க்ரீன் ஞானவேல்ராஜா கொடுத்த பேட்டி வரை பல சர்ச்சைகள் வந்து கொண்டிருக்கிறது.

ஞானவேல்ராஜாவுக்கு எதிராக சமுத்திரக்கனி, சசிக்குமார் உள்ளிட்ட பலவேறு பிரபலங்கள் பேசி வருகின்றனர். ஆனால் கார்த்தி, சூர்யா இருவரும் இதுபற்றி இன்னும் எந்த கருத்தும் தெரிவிக்காமல் மெளனம் காத்து வருகின்றனர்.

மேலும் சூர்யா அடுத்து வெற்றிமாறன் இயக்கத்தில் நடிக்க இருக்கும் வாடிவாசல் படத்தில் அமீர் ஒரு மெயின் ரோலில் நடிக்கிறார் என அறிவிக்கப்பட்டு இருக்கும் நிலையில், இந்த சர்ச்சைகளால் அமீர் அந்த படத்தில் இருந்து வெளியேற வாய்ப்பிருக்கிறது என கிசுகிசுக்கப்பட்டது.

அமீர் – வெற்றிமாறன் சந்திப்பு
இந்நிலையில் இன்று இயக்குனர் வெற்றிமாறன் நேரில் சென்று அமீரை சந்தித்து பேசி இருக்கிறார். அதன் புகைப்படமும் வெளியாகி இருக்கிறது.

வாடிவாசல் படத்தில் அமீர் கதாபாத்திரம் மிக முக்கியமானது என்றும், கதை எழுதும் தருணத்தில் அவரது ரோலுக்கான முக்கியத்தும் அதிகரித்து இருக்கிறது என்றும் தெரிவித்தாராம். அதனால் வாடிவாசலில் அமீர் சூர்யா உடன் நடிப்பது மீண்டும் உறுதியாகி இருக்கிறது.