வேறு ஒரு மெகா ஹிட் படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்கும் மோகன்ராஜா

மோகன் ராஜா
ஒரு கலைஞன் சினிமாவில் ஜெயிக்க வேண்டும் என்றால் முதலில் அவனுக்கு தன்நம்பிக்கை, தைரியம் என அனைத்தும் வேண்டாம். காரணம் சினிமாவில் நுழைந்தவுடன் நல்ல விமர்சனங்கள் கிடைத்து ஜெயித்துவிட முடியாது.

முதலில் நமது வேலையை பற்றி வரும் கலவையான விமர்சனங்களை ஏற்றுக்கொள்ளும் பக்குவம் வந்தால் தான் சாதிக்க முடியும்..

அப்படி தமிழ் சினிதாவில் ஆரம்பத்தில் இருந்து ரீமேக் பட இயக்குனர் என விமர்சிக்கப்பட்டவர் தான் மோகன் ராஜா.

தன்னை பற்றி வந்த விமர்சனங்களை அப்படியே தனி ஒருவன் படத்தின் மூலம் மாற்றினார்.

புதிய படம்
மோகன் ராஜா ஹிட் படமான தனி ஒருவன் படத்தின் 2ம் பாகம் எடுக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டது. அதோடு அதற்கான டீசரையும் அவர் வெளியிட்டு செம ஹைப் ஏற்றினார். ஆனால் இப்போது மோகன் ராஜா குறித்து மற்றொரு தகவல் வந்துள்ளது.

அதுஎன்னவென்றால், ஜெயம் ரவி திரைப்பயணத்தில் மிக முக்கியமான படம் எம் குமரன் சன் ஆப் மகாலட்சுமி. இப்படம் தெலுங்கு ரீமேக் என்றாலும், தற்போது இப்படத்தின் இரண்டாம் பாகத்தை ராஜா உருவாக்க முடிவு செய்துள்ளாராம்.